நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 61,753 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 15ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 61,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Update: 2021-12-19 02:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10,69,504 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 6,65,033 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடைபெற்ற 14 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,50,043 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 15ஆம் கட்ட தடுப்பூசி முகாம் 505 இடங்களில் நடைபெற்றது. இந்த மையங்களில், சுமார் 4 ஆயிரம் பேர் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 61,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூடபோடாதவர்களும், முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News