புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

குமாரபாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-01 14:15 GMT

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது ( கோப்பு படம்)

குமாரபாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்பட போலீசார் பலர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தம்மண்ணன் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனை செய்த சுப்புலட்சுமி, 59, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 159 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News