நாமக்கல் மாவட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 26,147 பேருக்கு செலுத்தப்பட்டது

Update: 2022-05-01 01:30 GMT

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 73 ஆயிரத்து 468 பேருக்கும் (84.06 சதவீதம்), இரண்டாம் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 56 ஆயிரத்து, 532 பேருக்கும் (63.14 சதவீதம்), செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று, அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 368 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி ஆகிய இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று நடந்த முகாம்களில் ஒரே நாளில் 26 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News