நாமக்கல் நகராட்சியில் 21 வயது இளம்பெண், 75 வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் நகராட்சி 7வது வார்டுக்கு 21வயது இளம்பெண் ஜோதிகா, 35வது வார்டுக்கு 75 வயது மூதாட்டி கமலா வேட்பு மனு தாக்கல்.

Update: 2022-02-04 14:15 GMT

நாமக்கல் நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 21வயது இளம்பெண் ஜோதிகா, 35வது வார்டுக்கு 75 வயது மூதாட்டி கமலா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நாமக்கல் நகராட்சியில் 7 வது வார்டில் போட்டியிட 21 வயது இளம் பெண் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 35வது வார்டில் திமுக வேட்பாளராக 75 வயது மூதாட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் நாமக்கல் நகராட்சியில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் போட்டி போட்டு வேட்பு மனுக்களைத் தாகல் செய்தனர். இந்த நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட நல்லிபாளையத்தை சேர்ந்த 21 வயதான (பி.எஸ்.சி கம்யூட்டர்சயின்ஸ் ) பட்டதாரி இளம்பென் ஜோதிகா (21) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மூதாட்டி: நாமக்கல் மோகனூர் ரோடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் தர்மலிங்கம், இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மனைவி கமலா (75), இவரது மகன் மோகன் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கமலா தர்மலிங்கம், நாமக்கல் நகராட்சி 35வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட நேற்று தனது வேட்பு மனுவை நகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News