நாமக்கல் நகராட்சியில் 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

நாமக்கல் நகராட்சியில் இன்று நடைபெற்ற முகாமில், 45 வயதிற்கு மேற்பட்ட 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-06-03 09:58 GMT

நாமக்கல் நகராட்சி சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொரேனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, அரசு சார்பில்  பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று நோய் தொற்று உள்ளதாக என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், நோய்த்தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மறுபுறம், தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்துள்ளதை அடுத்து நாமக்கல்லில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், நாமக்கல் நகராட்சி சார்பில் 45 மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நாமக்கல், சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், நகராட்சிக்கு உட்பட்ட 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக, ஏராளமான பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை, காவல் துறையினர் சமூக இடைவெளி விட்டு நிற்கும்படி அறிவுறுத்தி, ஒழுங்குபடுத்தினர். கூட்ட நெரிசலை தவிர்க்க, டோக்கன் வழங்கிய போலீசார், அசம்பாவிதம் தவிர்க்க அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News