நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் மது விற்பனை ரூ.12.30 கோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.12.30 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-05 12:15 GMT

பைல் படம்.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் நாளென்றுக்கு சுமார் 40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறும்.

இது தவிர ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக விற்பனையாகும். இந்த தீபாவளி பண்டிகைக்கு மாநிலம் முழுவதும் மதுப்பிரியர்கள் அதிகமாக மதுவகைகளை வாங்கி குடித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 180 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை நடைபெறும். விசேஷ நாட்களில் ரூ.3 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும்.

இந்த தீபாவளி பண்டிகையில் மதுபானங்கள் விற்பனை களை கட்டியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் ரூ.12 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News