நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை

நாமக்கல்லில் குடியரசு தின விழா ஒத்திகை, காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை

Update: 2021-01-23 13:16 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், போலீசாரின் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று துவங்கியது. நாடு முழுவதும், வரும், 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதில் ஆட்சியர் மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறந்த மாவட்ட அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 

அதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் இன்று காலை ஒத்திகை துவங்கியது. இதில், ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் போலீசார், 95 பேர் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர். 

Tags:    

Similar News