தமிழகம் போதை பொருட்கள் சந்தையாக மாறியுள்ளது: பாஜக குற்றச்சாட்டு

Tamil Nadu has become a market for liquor and drugs:BJP alleges

Update: 2022-07-03 15:45 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற பாஜக வழிகாட்டுதல் கூட்டத்தில் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசினார்

தமிழகம் மது மற்றும் போதை பொருட்கள் சந்தையாக மாறியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில்  பாஜக சார்பில் வேருக்கு நீர் எனும் தலைப்பில் நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ராமலிங்கம் பங்கேற்று பேசினார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் இரவு முழுதும் திறந்து விற்பனை செய்யப்படு கிறது. தமிழகம் முழுதும் பள்ளிகள் அருகிலேயே பல கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ரயில்கள் மூலமாக கடத்தப்பட்ட 400 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தமிழகத்தில் கிடைத்திருக்கிறது.

தமிழகம் போதை பொருள் சந்தையாக மாறியுள்ளது. இதற்கு  காவல்துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்தான் முழு காரணம் . சட்டம் ஒழுங்கை பராமரிக்காத முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார். தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசாக மாறியுள்ளது. இங்குள்ள மத்திய அரசின் திட்டங்கள் பாரத பிரதமரால் நிறைவேற்றப் படுகிறது.அவைகளையெல்லாம் தன்னுடைய அரசு செயல்படுத்துவதாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இன்று ஊர், ஊராக வலம் வந்து கொண்டுள்ளார்.

நாட்டு மக்கள் பரிதவிக்கும் நிலையில் இவர்கள் ஏமாற்று வேலையை செய்து கொண்டுள்ளனர். இதனை கண்டித்து பாஜக சார்பில் வரும் 5-ஆம் தேதி மாநிலம் முழுதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. அரசை திருத்த முயற்சிக்கிறோம். முடியவில்லை என்றால், அரசை தூக்கி எறிய பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியை உலக தலைவர்கள் எல்லாம் பாராட்டி வருகிறார்கள் என்றார் அவர்.

இதில் மாவட்ட பொது செயலர்கள் நாகராஜ், சேதுராமன், அரசு தொடர்பு துறை நிர்வாகி வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட செயலர்கள் சுகுமார், சவுமியா, நகர தலைவர் கணேஷ்குமார், நிர்வாகிகள் சரவணன், சண்முகசுந்தரம், உதயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News