குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரம்
குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;
குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சில நாட்களாக மேலே போடப்பட்ட சிமெண்ட் அட்டைகள் அகற்றப்பட்டன. பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.
பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட் சில நாட்கள் முன்பு, புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கோவை, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கும், கல்வி பயிலவும் ஏராளமான பேர் கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிலிருந்து சென்று வருகின்றனர். அதே போல் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல அரசு அலுவலக பணிகளுக்காகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராளமான பேர் தினமும் அதே இடத்திலிருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர்.
தற்போது கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியதால், பஸ் நிறுத்தம் எங்கு என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க இந்த பகுதியில் இரு புறமும் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.