தொடர் விடுப்பில் இருந்த சிறைத்துறை காவலர்கள் அடுத்தடுத்து டிஸ்மிஸ்
தொடர் விடுப்பில் இருந்த சிறை காவலர்கள் அடுத்தடுத்து டிஸ்மிஸ் செய்து மதுரை சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது;
தொடர் விடுப்பில் இருந்த சிறை காவலர்கள் அடுத்தடுத்து டிஸ்மிஸ் செய்து சிறைத்துறை நடவடிக்கை
மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட சிறையில் முதல் நிலை காவலராக இருந்து வரும் மாதர் சிக்கந்தர் என்பவர் தொடர் விடுப்பில் இருந்ததால், அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு.ஒரே வாரத்தில், மதுரை கொடைக்கானல் ராமநாதபுரம் ஆகிய சிறையில் பணியாற்றிய மூன்று காவலர்களை டிஸ்மிஸ் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த முனீஸ்வரன் என்பவர் தொடர் விடுப்பு எடுத்தும், தொடர்ந்து பலமுறை இரவு காவல் பணியை புறக்கணித்தும் வந்தாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுபோன்று, கொடைக்கானல் கிளைச்சிறையில் இரண்டாம் நிலை காவலரான ஆனந்த் என்பவரையும் கடந்த வாரம் மதுரை மத்திய சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், நேற்று மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட சிறையில் முதல் நிலை காவலராக இருந்து வரும் மாதர் சிக்கந்தர் என்பவர் தொடர் விடுப்பில் இருந்ததால், அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒரே வாரத்தில் மதுரை, கொடைக்கானல், ராமநாதபுரம் ஆகிய சிறையில் பணியாற்றிய மூன்று காவலர்களை பணிநீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.