மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம்
மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் குடியரசுத்தலைவர் சிறப்பு தரிசனம் செய்திட ஏற்பாடு செய்திருந்தது;
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரைக்கு வந்த இந்திய குடியரசு தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டெல்லியில் இருந்து 8.40 மணிக்கு ராணுவ விமானம் மூலம் கிளம்பி 11.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.
மதுரை விமான நிலையம் வருகை தந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், தென்மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கர்க்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மதுரை விமான நிலையத்திலிருந்து அரசு வாகனங்கள் அணி வகுப்பில் மீனாட்சி அம்மன் கோவில் சென்றார்.
மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அவருக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்தது. இதை அடுத்து, இந்திய குடியரசு தலைவர், மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். சிறப்பு தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து சர்க்யூட் ஹவுஸ் சென்று மதிய உணவு முடித்து விட்டு மறுபடியும், மதுரை விமான நிலையம் வந்தடைந்து மதியம் 2 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்..இதை ஒட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவர் வருகையோட்டி அவனியாபுரம் - அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. அவனியாபுரம் - செம்பூரணி சாலை வழியாக வைக்கம் பெரியார் நகர் ரிங் ரோடு சென்று அங்கிருந்து மண்டேலா நகர் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.