மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி: ஆட்சியர் தொடக்கம்

மதுரையில் பல இடங்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-01-10 00:15 GMT

மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடக்கி வைத்த  மாவட்டஆட்சியர் அனீஸ் சேகர்.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை  மாவட்ட  ஆட்சியர் அனீஸ் சேகர் தொடக்கி வைத்தார். 

2023 தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பானது அனைத்து நியாய விலை கடைகளில் இன்று வழங்கப்பட்டது. தமிழக அரசு பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அரிசி அட்டைதாரருக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சீனி 6 அடி உயரம் கொண்ட முழு நீலக்கரும்பு ஆகியவற்றை இன்று முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக, நியாய விலைக் கடை ஊழியர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தேதியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என, தமிழக அரசானது அறிவிப்பை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், இன்று முதல் மதுரை மாநகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக ரூபாய் ஆயிரம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டது.

முதல் ஒரு பகுதியாக, மதுரை பழங்காநத்தம் பசுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொடக்க சங்கம் நியாய விலை கடையில் மதுரை மாநகராட்சி 70 வது வார்டு கவுன்சிலர் அமுதா தவமணி பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

இதில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவேளையை பின்பற்றி பொங்கல் தொகுப்பினை பெற்று சென்றனர்.மதுரையில் பல இடங்களில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 1முழுக் கரும்பு மற்றும் ₹1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, உதவி ஆட்சியர் (பயிற்சி)ஆகியோர் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜனவரி 9ம் தேதி  பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி  நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.. தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு தரமான பொருட்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News