Iypasi month sivan temple special pooja மதுரை மாவட்ட கோயில்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம்
Iypasi month sivan temple special pooja ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்புற சிவன்கோயில்களில் சிறப்பு பூஜை நடந்து அன்னாபிஷேகமும் சிறப்பாக நடந்தது.;
Iypasi month sivan temple special pooja
மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானுக்கு பக்தர்களால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் சிவ பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Iypasi month sivan temple special pooja
இதை அடுத்து, அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.இதே போல, மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும் ,ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், மதுரை ஆவின் சாத்தமங்கலம் அருள்மிகு பால விநாயகர் ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சுவாமிக்கு, ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிவபெருமானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர் .
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா அய்யனார் கோவிலில் உள்ள ஸ்ரீ சந்தன லிங்கேஸ்வரருக்கு ஐப்பசி மாதம் பௌர்ணமி ஒட்டி, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, தண்டலை தங்கவேல் செய்திருந்தார்.