மதுரை மாநகராட்சியில், கட்டிட வரைபட அனுமதி காலம் நீட்டிப்பு

கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு;

Update: 2021-11-03 13:45 GMT

பைல் படம்.

பழைய மென்பொருள் மூலம் கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கால அவகாசம்  30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் 

மதுரை மாநகராட்சியில் மாநில அளவிலான மென்பொருள் மூலம் கட்டிட வரைபடத்தை பரிசீலனை செய்து, அனுமதி வழங்கும் புதிய முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. பழைய மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்து, ஏற்கெனவே கட்டணம் செலுத்தி நிலுவையிலுள்ள கோப்புகளை பழைய மென்பொருளின் வாயிலாகவே அனுமதி பெற்றுக் கொள்ளும் வசதி  30.11.2021 (செவ்வாய்க் கிழமை) வரை மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் புதிய மென்பொருள் மூலம் புதிதாக பதிவேற்றம் செய்து மட்டுமே அனுமதிக்கு விண்ணப்பிக்க இயலும்.

எனவே, ஏற்கனவே விண்ணப்பித்து ஆவணங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் உள்ள விண்ணப்ப தாரர்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News