மதுரையில் கார்- மோட்டார் சைக்கிள் மோதல்: டாக்டர் சாவு
மதுரையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
மதுரையில் பைக்- கார் மோதிய விபத்தில் காரை ஓட்டிய டாக்டர் பலி:
மதுரை ஆண்டாள்புரம் அக்ரிணி அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் கந்தன்( 82 ).இவர் டாக்டர் ஆவார். அதே பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(42.) இவர் அந்தப்பகுதியில் பைக் ஓட்டிச்சென்றார். அவர் மகன் மணிமாறன் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்றார்.அவர்களுக்கு பின்னால் டாக்டர் கந்தன் மாருதி கார் ஓட்டிச் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. டாக்டர் கந்தனுக்கு பலமாக அடிபட்டது .பைக்கில்சென்ற ராம்குமாரும் மகன் மணிமாறனும் கீழே விழுந்தனர். இதில் மணிமாறனுக்கு காயம் ஏற்படஅடது.கார் ஓட்டிச்சென்ற டாக்டரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
கீரைத்துறையில் அப்பளம் தயாரிப்பு நிறுவன விபத்தில் மிஷின் ஆபரேட்டர் விரல்கள் சேதம்:
மதுரை சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்( 50.). இவர் மிஷின் மெக்கானிக் ஆவார். கீரை துறையில் சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான அப்பல கம்பெனியில் மிஷின் ஒன்று பழுதாகிவிட்டது. அதை சரி செய்வதற்காக நடராஜனை அழைத்திருந்தார். அவர் அந்த மிஷினை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது அந்த கம்பெனியின் ஊழியர் ரமேஷ் திடீரென்று மின் சுவிட்சை போட்டு விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து மிஷின் ஓட தொடங்கியது .இதில் மெக்கானிக் நடராஜனின் கைவிரல்கள் துண்டானது. இந்த விபத்து குறித்து நடராஜன் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஊழியன் ரமேஷ் மற்றும் உரிமையாளர் சரவணகுமார் மீது வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகை தந்தார்.
பெத்தானியாபுரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை.
மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அந்தோணி கிரண்(22 )..இவர் கடந்த 10 மாதங்களாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தந்தை வேளாங்கண்ணி கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் தற்கொலை செய்து கொண்ட அந்தோணிகிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .