மாஸ்க் அணியவில்லை - நிலைய அதிகாரிக்கு அபராதம் விதித்த ரயில்வே...

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார்

Update: 2021-05-14 03:18 GMT

ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

ரயில் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வழிகாட்டு விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்தது. முகக்கவசம் அணிவது தவிர துப்புவது உள்ளிட்ட தொற்று பரப்பும் செயல்களை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறை அடுத்த 6 மாதங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே கூறியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதத்தை தமிழக அரசு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் பகுதயில் அமைந்துள்ள டானுரோட் ரயில்நிலைய அதிகாரி ஷிரிஷ் குமார் ஜாதவ் மாஸ்க் அணியாமல் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு ரயில்நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாஸ்க் அணியாத காரணத்திற்காக பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனும் நோக்கில் ரூ .500 அபராதம் விதித்துள்ளனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Tags:    

Similar News