கரூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

கொரோனா தடுப்பு ஊசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என மத்திய மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், இதற்கான ஒத்திகை நடவடிக்கை தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக இன்று நடை பெற்று வருகிறது.

Update: 2021-01-08 08:23 GMT

கொரோனாவை தடுக்கும் தடுப்பு ஊசி ஒத்திகை இன்று கரூரில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட, கரூர் மாவட்டத்தில் 48 அரசு மருத்துவமனை மற்றும் 405 தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 6000 பேர்களின் தகவல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை, மற்றும் வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் , கரூர் கஸ்தூரிபாய் நினைவு தாய் சேய் நல விடுதி மற்றும் கரூர் அப்போலோ மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் இன்று 25 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்படவேண்டும், அதற்கு முன் அவர்கள் ஆன்லைனில் குறுஞ்செய்தியை எவ்வாறு அனுப்புவது குறித்து ஒத்திகை ஓட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில், தடுப்பூசிகளை வைப்பதற்கு போதுமான குளிர்சாதன வசதிகள் போதிய அளவில் உள்ளது என்றும், தடுப்பூசிகளை வைப்பதற்கு 8 குளிர்சாதன பெட்டிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News