விடுமுறை தினத்தை முன்னிட்டு குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-03-13 14:00 GMT

குமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்.

தமிழகத்தில் அமைந்துள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

அதன்படி வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள இயற்கை காட்சிகள் கடற்கரைகள் மற்றும் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிப்பது வழக்கம்.

பள்ளி விடுமுறை நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் உள்ளிட்ட காலங்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

இதனிடையே ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர் சூரிய உதய காட்சியை கண்டு ரசித்தனர்.

மேலும் கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு தங்களுக்கு செஞ்சா அவர்கள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சொகுசுப் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

மேலும் கடற்கரையில் கூடிய சுற்றுலா பயணிகள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும் கடலில் கால் நனைத்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News