திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

குமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-05-13 08:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் அமைந்துள்ள திருவாழ்மார்பன் திருக்கோயிலில் சித்திரை  தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் அமைந்துள்ள திருவாழ்மார்பன் திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மூலவரை போன்று இங்குள்ள சுவாமியும் காணப்படுவதால் இக்கோவில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் வருகை தந்து திருத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு திருப்பதிசாரம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News