குமரியில் விமரிசையாக நடைபெற்ற தம்புரான் விளையாட்டு: பக்தர்கள் தரிசனம்.

குமரியில் வெகு விமர்சையாக நடைபெற்ற தம்புரான் விளையாட்டை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-20 14:15 GMT

காவல் தெய்வமான ஸ்ரீ சாஸ்தா குதிரை வாகனத்தில் எழுந்தருளி வில் அம்புடன் தீய சக்திகளை வேட்டையாடும் நிகழ்ச்சி

காவல் தெய்வமான ஸ்ரீ சாஸ்தா குதிரை வாகனத்தில் எழுந்தருளி வில் அம்புடன் தீய சக்திகளை வேட்டையாடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் தம்புரான் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது.

மன்னர் காலம் முதல் நடைபெற்று வரும் பழமையும் பிரசித்தியும் பெற்ற தம்புரான் விளையாட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெறுவது வழக்கம்.இதனிடையே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தம்புரான் விளையாட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பஜனை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மேளதாளங்கள் முழங்க சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து நடைபெற்ற தம்புரான் விளையாட்டு நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News