நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்கள் ரத்து: தென்னக இரயில்வே

நாகர்கோவில் திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

Update: 2021-11-16 15:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 72 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் அருகே நுள்ளிவிளை பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீரானது இரயில் தண்டவாளத்தை ஆக்கிரமித்தது.

மேலும் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையேயான இரயில் தண்டவாளத்தில் 3 இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது, இந்நிலையில் கனமழையால் இரயில் தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்களின் சேவை இரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி குருவாயூர் - சென்னை விரைவு ரயில்(16128) இன்று குருவாயூர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாகவும், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் (12633) நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதே போன்று பெங்களூரு கே.எஸ்.ஆர். - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (16526) சேவை, கொல்லம் - குமரி இடையே இன்று ரத்து செய்வதாகவும் மதுரை - புனலூர் சிறப்பு ரயில்(06729) சேவை திருநெல்வேலி - புனலூர் இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News