ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த கன்னியாகுமரி

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்து காணப்பட்டது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி.

Update: 2022-01-17 17:48 GMT

வெறிச்சோடி காணப்பட்டது கன்னியாகுமரி சுற்றுலா தலம்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி காணும் பொங்கல் நாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாலும் அய்யப்ப பக்தர்களாலும் களைகட்டி காணப்படும்.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளதோடு கன்னியாகுமரி சுற்றுலா தலம் அடைக்கப்பட்டது.

பொதுவாக பொங்கல் விடுமுறை நாளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இருந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி காணும் பொங்கலை கொண்டாடுவர்.

இந்நிலையில் தற்போது நீடித்து வரும் தடை காரணமாக பொங்கல் விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் கன்னியாகுமரி களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News