பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது

சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு காட்டினுள் விட்டனர்.

Update: 2021-06-11 14:30 GMT

பிடிபட்ட 10 அடி நீளமுள்ள பாம்பு 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட கேகே நகர் பகுதியில் தோவாளை ஊராட்சிக்கு குடிநீர் வழங்குகின்ற நல்லதண்ணீர் குளம் உள்ளது. இக்குளத்தின் அருகே செல்லும் தோவாளை - மாதவலாயம் சாலையின் கரையோரமாக சென்ற அப்பகுதியை சார்ந்த சிலர் குளத்தின் கரையோரமாக நெளித்தப்படி பாம்பு ஒன்று கிடப்பதைக் கண்டனர்.

பொதுமக்களை கண்டதும் சீரிய மலைப்பாம்பு பொதுமக்களை நெருங்க விடாதபடி அச்சுறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வனதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் தலைமையிலான வனகாப்பாளர்கள் மலைபாம்பினை பிடித்தனர்.

தொடர்ந்து 10 அடி நீளமுள்ள பாம்பினை அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர், பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற இப்பகுதியில் மலைப்பாம்பு கிடந்தது பொதுமக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News