குமரி காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து

குமரி காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆட்டோ 4 டூ வீலர் முற்றிலும் சேதம்.

Update: 2021-06-18 13:00 GMT

குமரி காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆட்டோ 4 டூ வீலர் முற்றிலும் சேதம்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனோ ஊரடங்கு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அரசின் உத்தரவு மற்றும் கொரோனோ விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

காவல்நிலையத்தில் உள்ள போலீசார் அனைவரும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் உஷா இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் அங்கு நின்ற 3 ஆட்டோக்கள் மற்றும் 4 பைக்குகள் எரிந்து சாம்பலாயின.

விசாரணையில் கன்னியாகுமரியில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீய வைத்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News