தொடர்மழை: குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தொடர்மழை காரணமாக குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-09-27 11:15 GMT

தொடர் கனமழை காரணமாக குமரி வந்த சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, குமரி பகவதி அம்மன் கோவில், கடற்கரைப் பகுதிகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

கோடை விடுமுறை நாட்கள் சபரிமலை சீசன் நாட்கள் உள்ளிட்ட நாட்களில் குமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கான அளவில் இருக்கும்.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக குமரி சுற்றுலாத்தலம் முற்றிலுமாக அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து நீடித்து வந்த கனமழை காரணமாக சுற்றுலா தலங்களுக்கும், கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்றனர், மேலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News