பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பொற்பந்தல் பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2022-02-06 04:45 GMT

 மாம்பாக்கம் கிராமத்தில் பள்ளி நேரத்தில் செல்லும் கனரக வாகனம் 

பள்ளி நேரத்தில் சாலையில் கனரகவாகனங்களின் இயக்கத்தை  தடைசெய்ய வேண்டுமென  மாம்பாக்கம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: மாம்பாக்கம் பகுதியில்  உள்ள அமலா அன்னை தொடக்கப்பள்ளியில் படிக்கின்றனர். இந்த பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் அருகிலேயே அமல அன்னை மேல்நிலை பள்ளியும் உள்ளது இந்த பள்ளியில் 500 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

மேலும் தினமும் பள்ளிக்கு சிறிய மாணவர்கள் காலை 8:00 முதல் 09:30 வரையிலும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரையிலும் மாணவர்கள் அனைவரும் மிதிவண்டியிலும் நடந்தும் வருகின்றனர்.அந்த நேரத்தில் பேரானக்காவூர் மற்றும் பொற்பந்தல் பகுதியிலுள்ள கருங்கற்களை அரைத்து M-SAND கொடுக்கும் ஆலைகளில் இருந்து மிகப்பெரிய கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதாலும் தொடர்ந்து வருவதாலும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.நிறைய ஓட்டுநர்கள் செல்போனை பேசிக் கொண்டே செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது

எனவே பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு பேரானக்காவூர் மற்றும் பொற்பந்தல் பகுதியிலுள்ள கருங்கற்களை அரைத்து M-SAND கொடுக்கும் ஆலைகளில் இருந்தும், செங்கல்பட்டு பகுதியில் இருந்து இந்த ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களை தினமும் காலை 08:00 மணி முதல் 09:30 மணி வரையிலும் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரையிலும் இந்த பள்ளிக்கூடப் பகுதியில் இயங்காமல் தடுத்து நிறுத்தி பள்ளி மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.


Tags:    

Similar News