காஞ்சிபுரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஏழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-10-22 07:15 GMT

பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்ட பேரவை கூட்டம் இரு நாட்கள் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் கேள்வி நேரத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் வலியுறுத்திய விவாதம் பின்வருமாறு: 

காலையில் மிகத் தொன்மை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிய உள்ள நிலையில் மீண்டும் திருப்பணி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தற்போது அதற்கான நிதியை ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அதிகளவில் சென்னையில் இருப்பதாகவும் அங்கு நீண்ட காலமாக தனியாரிடம் இருந்த பள்ளியை மீட்டெடுத்து இன்றைக்கு அறநிலைத்துறையின் மூலம் மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு வருவது அரசுக்கும் அமைச்சருக்கும் அந்த உத்தரவை வழங்கிய முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதே போல் காஞ்சிபுரத்தை சுற்றி ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளதாகவும் அதில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இங்கு அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொன்மை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலை இருமுறை ஆய்வு செய்துள்ளதாகவும் தற்போது அதனை பழிய புராதான நிலைக்கு கொண்டு வர 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கும் எனவும் தெரிவித்தார்.

நில மீட்பு என்பது காஞ்சிபுரத்தை பொருத்தவரை 91 கோடி ரூபாய் அளவிற்கு அந்த பகுதியில் மட்டுமே நிலத்தை மீட்டிருக்கிறோம் கிட்டத்தட்ட 91 ஏக்க நிலப்பரப்பை இதுவரையில் மீட்டிருக்கிறோம் சட்டப் போராட்டத்தில் அந்த பகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு நிச்சயமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் வெற்றி பெற்று நிச்சயம் கல்லூரி தொடங்குவதற்கான சாத்திய கூறி இருந்தால் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அதற்கு விளக்கம் அளித்தார்.

காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மட்டும் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டு அது தற்போது குன்றத்தூரில் இயங்கி வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டால் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பெரும் பயனடைவர்.

Tags:    

Similar News