காஞ்சிபுரம் அருகே 22டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய் அலுவலர் அதிரடி

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 22டன் ரேஷன் அரிசியை, மாவட்ட வருவாய் அலுவலர் குழு பறிமுதல் செய்தது.

Update: 2021-12-30 01:00 GMT

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் அருகே லாரிகள் மூலம் வெளிமாநிரங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம்,  அங்கு 2மினி லாரிகளில் இருந்து 1சரக்கு லாரிக்கு அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவதை உறுதி செய்தார்.

இதனை கண்ட ஒட்டுநர்கள் தப்பி ஓடினர். மேலும் ஒரு மினி லாரி தப்பி சென்றது. இதனையெடுத்து,  நின்று கொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேசன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையெடுத்து ஒரு மினி லாரி உட்பட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார்,  தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்களை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 60டன் ரேசன் அரிசியும், 6லாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News