கல்குவாரி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை: காஞ்சிபுரம் டிஐஜி உறுதி

இனிவரும் காலங்களில் கல்குவாரி விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்திய பிரியா கல்குவாரி விபத்து பகுதியை ஆய்வுக்கு பின் தகவல்..

Update: 2021-06-08 10:30 GMT

விபத்து ஏற்பட்ட கல்குவாரியை காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த பட்டா கிராமத்தில் நேற்று மாலை தனியார் கல்குவாரி தொழிற்சாலையில் மண்சரிவில் சிக்கி இரு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வெளிச்சமின்மை, தொடர் மழை காரணமாக உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது.

இன்று காலை 6 மணி அளவில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர்,  தீயணைப்பு துறை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு சுனில் ஷேர்கான் என்பவரது உடல் மட்டும் மீட்டனர்.

காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா இப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தினார். மற்றொரு உடலை மீட்க ஆலோசனைகளை வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது , கல்குவாரி மண்சரிவு விபத்து இனிவரும் காலங்களில் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்குரிய நடைமுறைகளை ஆராய்ந்து சரி செய்யப்படும். இந்த விபத்து தொடர்பாக வருவாய்த்துறை புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது வருவாய்க் கோட்டாட்சியர் ராஜலட்சுமி வட்டாட்சியர் ஏகாம்பரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News