பிரதமர் மோடி பிறந்தநாள்: 138 ரத்ததானம் , 5 பேர் உடல் தானம்

பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் இரத்ததானம் மற்றும் உடல்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-09-17 11:15 GMT

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒட்டி ரத்ததானம் , உடல் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் இன்று பாஜகவினரால் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் ஜானகிராமன் தலைமையில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் மாபெரும் ரத்ததானம் மற்றும் உடல்தான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம் மற்றும் உடல் தான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முன்னதாக காஞ்சிக்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் முருகனுக்கு மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த ரத்ததான முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை,  சவீதா மருத்துவமனகளிலிருந்து  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ரத்ததான நன்கொடையாளர்களிடமிருந்து இரத்ததானம் பெற்றனர். அண்ணா அரசு உறுப்புக் கல்லூரி நாட்டு நல பணிந்திட்ட மாணவர்கள் உள்ளிட்ட 138 பேர் ரத்ததானமும் ,  ஐந்து பேர் முழு உடல் தானத்தையும் அளித்தனர்.

ரத்த தானம் அளித்தவர்களுக்கு நற்சான்றிதழும்,  உடல் தானம் செய்தவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சால்வைகள் அணிவித்தும் கௌரவித்தார்.

இன்று மாலை ஐந்து மணி வரை ரத்ததான வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜானகிராமன் தெரிவித்தார்.

Tags:    

Similar News