அடிப்படை வசதிகள் இன்றி மருத்துவ முகாம், மாற்று திறனாளிகள் சாலைமறியல்

காஞ்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி நடைபெற்ற மருத்துவ முகாமை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-13 08:30 GMT

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளிகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகளை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வழங்குவர். அதனடிப்படையில் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு உரிய நலதிட்ட உதவிகள் மற்றும் பிற சலுகைகள் பெற இச்சான்றிதழ் உதவும்.

இதற்கான சிறப்பு முகாம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. பங்கேற்க அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கூடினர்.

காலை 8 மணி முதல் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி வரை மருத்துவர்கள் வராததால் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்தனர்.

மேலும் இவர்களுக்கு போதிய வீல்சேர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  நலத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என கூறி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடும் வெயில் கொரோனா பரவலை தடுக்க அரசு விதி முறைகளை பின்பற்றி காலையிலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற சூழ்நிலை உருவாகி இருக்காது எனவும்

தங்களால் எந்த ஓரு செயலையும் செய்ய முடியாமல் பல மணி நேரம் தவிர்த்து கொண்டிருந்ததாக  வருத்தத்துடன் தெரிவித்தனர்

Tags:    

Similar News