நத்தம் பட்டா வழங்க கோரி முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தினர் மனு

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் கிராமத்தில் கடந்த 1998 இல் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை மூலம் 132 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது.

Update: 2022-09-19 08:15 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்ற போது மனு அளித்த பொதுமக்கள் .

தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்ட சிறப்பு தலைவர் ராஜா, தலைவர் மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொது செயலாளர் ஜி. எஸ். சேகர், பொருளாளர் குமார் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த தாவிதிர் சமுதாயத்தைச் சார்ந்த முடி திருத்துவோர் தொழிலாளர்களுக்கு என காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அப்போதைய காஞ்சிபுரம் ஆட்சியர் ஆணைப்படி 1998 ஆம் ஆண்டு பிற்படுத்த நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் மூலம் 132- பேருக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டது.

அதில் 23- பேர் வீடு கட்டி வசித்து வருகிறோம் மற்றும் உள்ள இடத்திற்கு 20 ஆண்டுகளாகியும் வரைபடத்தில் அடிமனையளவு படி கல்நட்டு இதுவரை தரவில்லை.அதனால் அனைவரும் பாதிப்படைகின்றனர்.

எங்களுக்கு ஆதிதிராவிடர் வட்டாட்சியர் மூலம் வழங்கிய பட்டாவை வருவாய்த்துறை வட்டாட்சியர் மூலம் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது .

ஆனால் ஏற்கனவே பட்டா பெற்ற 132- பயனாளிகளுக்கு நத்தம் பட்டா கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் வந்த பிறகு தான் வரைபடத்தை வருவாய் நத்தக் கணக்கில் சேர்த்து உள்ளீர்கள் .

ஆனால் எங்களுக்கு நத்தம் பட்டா வழங்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்களுக்கு நத்தம் பட்ட வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News