மாமல்லபுரத்தில் வாகன கட்டணத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ.பாலாஜி கோரிக்கை

சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பார்வையிட வரும் வாகனங்களுக்கு கட்டணம் ரத்து செய்ய பாலாஜி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

Update: 2022-08-18 09:15 GMT

 மாமல்லபுரம் கடற்கரை கோயில் ( பைல் படம்) .

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மண்டல அளவில் ஆன வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன்  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கைகள் தெரிவிக்கலாம் என அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி பேசினார்.

இதில் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் பேருந்து நிலையத்தை புனரமைத்து தரும்படியும் , திருக்கழுக்குன்றம் பகுதியில் மீன் மார்க்கெட் , பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் பல்வேறு இடங்களில் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ,  வாகனங்களுக்கு தேவையான நிறுத்துமிடம் இல்லாமல் சாலையிலே நிறுத்துவதற்கு எதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி அதை முறைப்படுத்த வேண்டும் . கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தையும் ரத்து செய்து முறையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

திரூப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதிப்படுத்தி அதனை அமைச்சர் கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


Tags:    

Similar News