காஞ்சிபுரம் மாநகராட்சி: துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஓதுக்கீடு

காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் குமரகுருநாதன் துணை மேயராக பதவியேற்பார்

Update: 2022-03-03 07:15 GMT

துணை மேயராக பதவியேற்கவுள்ள காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதன்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது.

இதில் திமுக 31 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுகவினர் 9 இடங்களிலும், பாமகவில் இரு இடங்களிலும் சுயேச்சைகள் ஆறு பேரும்,  பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற சுயேச்சைகள் இருவர் திமுகவில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 50 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். நாளை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் நிலையில்,  இன்று திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக 22வது வார்டு பகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற குமரகுருநாதன் துணை மேயராகிறார்

Tags:    

Similar News