காஞ்சிபுரத்தில் போக்குவரத்து சேவை குறைப்பு: பயணிகள் காத்திருப்பு!

காஞ்சிபுத்தில் குறைந்தளவு பேருந்துகள் இயக்குவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-23 05:00 GMT

பேருந்து நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்த பயணிகள்

தமிழகத்தில் இரு வார ஊரடங்கு நாளை முடிவடையும் நிலையில் ,  நாளை முதல் அதனை மாற்றிக் முழுமையான ஊரடங்காக அமுல் படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று அனைத்து கடைகளும் செயல்படும் எனவும் பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அறிவிப்பு வெளியான நேற்று மாலை 3 மணி அளவில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. இன்று அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்லும் என நேற்று போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இன்று காஞ்சிபுரம் நகரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் காஞ்சிபுரத்திற்கு வரவும் காஞ்சிபுரத்தில் இருந்து திரும்பி ஊருக்கு செல்ல போதிய நகரப் பேருந்துகள் காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் இயக்கவில்லை.

மேலும் தனியார் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டுமே செயல்பட்டது . எஞ்சியுள்ள தனியார் பே3ருந்துகள் எதுவும் இயக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வெளியூரில் இருந்து வந்த பொதுமக்கள் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் பொருட்களுடன் காத்து கிடந்தனர்.

Tags:    

Similar News