காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-31 13:30 GMT

காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகப்பிரியா

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க  ஊரடங்கு அமல் படுத்தபட்டது. அத்துடன் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால் மதுப் பிரியர்கள் சில நாள் தங்கள்  இருப்பு  வைத்திருந்த மதுக்களை அருந்தி மகிழ்ந்தனர். மது தீர்ந்ததும் கள்ளச் சாராயம் தலையெடுக்க ஆரம்பித்து விற்பனைக்கு வந்தது.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பதினொரு பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

மாவட்டம் முழுவதும் சாராயம் விற்கும் நபர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு முதல்கட்டமாக பத்மா, அஞ்சலை, ஜெயபால், ரவிக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 3 பெண்கள் 23 நபர்களை கண்காணிப்பு குழுவினர் கைது செய்துள்ளனர். மேலும் சாலவாக்கம் ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ஊறல் அனைத்தும் அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News