காஞ்சிபுரம் மாவட்டத்தில், 101 மையங்களில் குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்று வரும் TNPSC தேர்வில் 43,051 நபர் தேர்வு எழுத உள்ளனர்.

Update: 2022-07-24 05:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குரூப் 4 (TNPSC) தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  குரூப் 4 (TNPSC) தேர்வு, 101 மையங்களில் நடக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம், இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 க்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் ௭,301 காலி பணியிடங்களுக்கு, 22 லட்சம் பேர், 7689 தேர்வு மையங்களில், தேர்வு எழுதுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC)  தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் 43,051 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத 101 சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, துணை ஆட்சியர் தலைமையில், 6 பறக்கும் படைகளும், துணை ஆட்சியர் 4 பேர் கண்காணிப்பாளர் அலுவலராகவும், மொபைல் டீமில் 27 பேர்,148 பேர் வீடியோ ஒளிப்பதிவாளர் என, நியமித்து குரூப் 4 தேர்வு எழுதுவோரை கண்காணிக்கும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு மையங்களுக்கு செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு  மையத்திற்கு காலை 8 மணி முதலே தேர்வர்கள் வர தொடங்கினர். அவர்களுக்கு கண்காணிப்பாளர்கள் தேர்வு விதிமுறைகளை தெரிவித்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு அனுமதி நேரம் முடிந்த பின் பலர் தேர்வு எழுத வந்தனா். அவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


 காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் டிஎன்பிசி தேர்விற்கு, தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தேர்வர்கள் ஏமாற்றமடைந்தனர்.


Similar News