தனது குழந்தைகளுக்கு தானே சொட்டு மருந்து வழங்கினார் காஞ்சிபுரம் ஆட்சியர்

அரசு மருத்துவமனையில் தனது குழந்தைகளுக்கு தானே சொட்டு மருந்து வழங்கினார் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி.

Update: 2022-02-27 05:47 GMT

தனது குழந்தைகளுக்கு தானோ சொட்டு மருந்து வழங்கினார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

தமிழகம் முழுவதும் இன்று இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதலே செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  ஆர்த்தி தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர் என்பதாலும்‌, குழந்தையின் பயம் நீங்க தானே சொட்டு மருந்து அளித்தார்.

இதன்பின் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உள்ள  குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி சிறப்பித்தார்.

மாவட்ட ஆட்சியர் தனது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து அளித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News