காஞ்சிபுரத்தில் புத்த பூர்ணிமா விழா..!

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள புத்த விஹார் வளாகத்தில் ரூ 3 கோடி மதிப்பில் போதிதர்மர், மணிமேகலை மற்றும் புத்தர் ஆலயம் அமைக்கப்படவுள்ளது.

Update: 2024-05-23 06:15 GMT

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள புத்த விஹார் ஆலயத்தில் புத்த பூர்ணிமா தினத்தை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்ற போது.

காஞ்சிபுரம் புத்த திருக்கோயிலில் புத்த பூர்ணிமா தினத்தை ஒட்டி ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புத்த பூர்ணிமா விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

இது கௌதம புத்தரின் பிறந்த நாளை கொண்டாடும் பண்டிகையாகும் இதன் மூலம் அவரின் கொள்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்தர் திருக்கோயில் தற்போது மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் போதிதர்மர், மணிமேகலை மற்றும் புத்தர் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


திருக்கோயிலில் இன்று காலை உலக அமைதிக்காக திருக்கோயில் நிர்வாகி திருநாவுக்கரசு தலைமையில், பௌத்த கொடியினை ஏற்றி, புத்த பிக்குகள் புத்தபிரகாசம் குணசீலர், ஜெயசீலர் தலைமையில் ஊர்வலமாக திருக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சிலம்பம் கரைத்து வர்மக்கலை குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.மாலை திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அரச மரத்தடியில் திருவிளக்கு ஏற்றி வழிபடுதல் மற்றும் போதி வந்தனா எனும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


புத்த பூர்ணிமா ஊர்வலம் மற்றும் சிறப்பு தியான வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News