காஞ்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை மைய பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது இதில் 1932 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

Update: 2024-05-22 04:30 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள காஞ்சிபுரம் அண்ணா  உறுப்பு பொறியில் கல்லூரி மையம்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுவையில் என 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. 

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் 17.48 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 12 புள்ளி 5 3 லட்சம் பேர் தேர்தலில் வாக்கு பதிவு செய்தனர். இதில் அதிக வாக்குப் பதிவாக மதுராந்.தகம் தொகுதியில் 78.3 சதவீதம் பதிவாகியது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்காக 6 சட்டமன்ற தொகுதிகளில் 1932 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. 

இதில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 443 வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 318 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,  செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 263 வாக்கு பதிவு இயந்திரங்களும்,  மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,  உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 303 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,  காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 331 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. 

வாக்குப்பதிவிற்கு பின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு உறுப்பு பொறியியல் கல்லூரியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் ஜூன் நான்காம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. 

இதில் ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமாக எடுத்துரைத்து அனைத்து தேர்தல் ஆணைய விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சுற்றுகள் எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வகையில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை  31 சுற்றுகளும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பொருத்தவரை 22 சுற்றுகளும் ,  செய்யூர் சட்டமன்ற தொகுதி 18 சுற்றுகளும்,  மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும் , காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 23 சுற்றுகள் என நடைபெறும்.

இதில் அதிகபட்சமாக செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு எண்ணிக்கை 31 சுற்றும் குறைந்தபட்சமாக செய்யூர் சட்டமன்ற தொகுதியில் 18 சுற்றுக்களும் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு மையத்தில் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது

Tags:    

Similar News