அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர வைத்த சுயேச்சைகள்!

காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

Update: 2022-02-22 14:00 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று அதனை எண்ணும் பணி இன்று நடைபெற்றது . இதில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கிய நிலையில்,  அரசியல் கட்சிகள் மாறி மாறி முன்னிலை வகித்து வெற்றி பெற்று வந்தது.

அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் 6 வார்டுகளில் சுயேச்சைகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து வெற்றி பெற்று அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைய செய்தனர்.

16 வது வார்டில் போட்டியிட்ட சாந்தி துரைராஜ் 426 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 27 வார்டில் போட்டியிட்ட திருமதி ஷாலினி 392 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 31-வது வார்டில் போட்டியிட்ட சுந்தரி அறுபத்தி ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

39 வந்து வார்டில் போட்டியிட்ட அன்பழகன் 331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 40வது வார்டில் போட்டியிட்ட பானுப்பிரியா சிலம்பரசன் 542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 46வது வார்டில் வெற்றி பெற்ற கயல்விழிசூசை 580 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

பல வார்டுகளில் குறைந்த அளவே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் 580 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News