கேஸ் போட்டால்தான், மாஸ்க் போடுவீங்களா ? -காஞ்சி எஸ்.பி

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பேருந்து நிலையத்தில், பொதுமக்களிடம் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Update: 2021-04-12 11:38 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் என பலரும் ஆங்காங்கே பொதுமக்களிடம் மாஸ்க் அணிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து மீண்டும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் பேருந்தில் இறங்கி வந்த பொதுமக்களிடமும் , அங்கு நடைபாதையாக வந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பொதுமக்களிடையே பேசுகையில், கேஸ் போட்டு தான் மாஸ்க் போடணுமா என கேட்டு, மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் வழங்கியும் , கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை, காவல் ஆய்வாளர் சிவக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் நெடுஞ்செழியன், பொது மக்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என பலதரப்பினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News