மிக்ஜம் புயல் காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்

மிக்ஜம் புயல் காலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தைவெளி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கியது.

Update: 2023-12-09 09:15 GMT

மிக்ஜம் புயல் காலங்களில் தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட  உதவிகளை வழங்கிய எம்எல்ஏ எழிலரசன்

சந்தைவெளி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பில் மிக்ஜம் புயல் காலங்களில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.காஞ்சிபுரம் மாநகரில் இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்தது.

தொடர் மழை ஏற்பட்டதால் மழை நீர் வெள்ளமாக சாலையில் வழிந்தோடி குப்பை மற்றும் கழிவுகளை பரப்பியது. இதனை அவ்வப்போது இப்பகுதி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தி , நோய் தொற்ற வண்ணம் ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவைகளை தெளித்து பணியாற்றினார்.

இக்காலங்களில் பொதுமக்களுக்கு சுகாதார தொற்று நோய்கள் ஏற்படா வண்ணம் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் பணியினை பாராட்டி காஞ்சிபுரம் சந்தைவெளி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பாக அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் இனிப்பு பரிமாறியபோது

திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் , மேயர் மகாலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், அறங்காவலர் குழு தலைவர் சுமதி உள்ளிட்டோர், 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினர். மேலும் இவர்கள் பணியை பாராட்டி வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு அறுசுவை உணவினை சிறப்பு விருந்தினர்கள் பரிமாறினர்.

மேலும் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய பொதுமக்களும் அன்னதான நிகழ்வு பங்கேற்று அறுசுவை உணவு உண்டனர்.

காஞ்சிபுரம் மாநகரில் மழை காலங்கள் பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டிய செயல் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் சசிகலா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவராஜ், நாகராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News