52 நெசவாளர் குழந்தைகளுக்கு ரூ 1.79 லட்சம் மதிப்பிலான கல்வி உதவி தொகை

டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் 52 நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-10-07 11:45 GMT

நெசவாளர் குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கிய எம்எல்ஏ ஏழிலரசன்.

டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் 52 நெசவாளர் குழந்தைகளுக்கு ரூபாய் 1.79 லட்சம் மதிப்பிலான காசோலைகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கி வாழ்த்தி பேசினார்.


பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் , கைத்தறி தொழிலினை ஊக்குவிக்கும் பொருட்டு நெசவாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெசவாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி இவ்விடத்திலும் தடைபடக்கூடாது எனும் நோக்கில்  அவர்கள் கல்வி பயில வேண்டும் என உயரிய நோக்கத்திற்காக டாக்டர் எம். ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் அறக்கட்டளையின் கீழ் பத்தாவது முதல் உயர் கல்வி வரை கல்வி உதவி தொகை கல்வி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.


அதன் படி 2023-2024 ஆம் ஆண்டிற்கு காஞ்சிபுரம் சரகத்தில் 52 நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி தகுதிக்கேற்ப ரூ 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் என ரூ.179,500/-க்கான தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் CVMP எழிலரசன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம் சரக கைத்தறி துறை துணை இயக்குநர் ச.மணிமுத்து, ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News