காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் மாஸ்க் வழங்கல்

காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீஸ் டிஎஸ்பி முருகன் முகக்கவசம வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-07-17 06:45 GMT

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு டிஎஸ்பி முருகன் முகக்கவசம் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெகுவாக குறைந்து தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 க்கும் கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா  வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முக கவசம் அணிவது மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து முறையாக பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன் இன்று பேருந்து நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்தில் பயணம் என அனைத்து வகையிலும் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் அணிய பயணிகள் மற்றும் பொபொதுமக்களுக்கு அறிவுரை வாங்கினார்.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் பேருந்தில் பயணித்த பயணி களுக்கு முகக்கவசம் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News