கொள்முதல் நெல் மூட்டைகள் பராமரிப்பு இன்றி தேக்கம்

காஞ்சிபுரம், வாலாஜாபாத் தாலுக்காவில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள், பராமரிப்பின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2021-04-30 11:44 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ,  வாலாஜாபாத் தாலுக்காவில் உள்ள அகரம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 13.4.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை ஏறத்தாழ பத்தாயிரம் நெல் மூட்டைகளை பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், நெல்மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி முறையாக வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  வீணாகும்  வாய்ப்புள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது,  லோடு ஏற்றும் லாரிகள் தனியார் வசம் உள்ளது.  நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் , ஏற்ற வேண்டிய மூட்டை அதிகளவில் உள்ளதாகவும் கூறி, சமாளிக்கின்றனர். 

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல் வீணாவதை தடுக்க வேண்டும் என்று, அகரம் கிராம் விவசாய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News