தடுப்பூசிக்கு நோ. பரிசோதனைக்கு ஓகே: வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள்

கோவிட் பரிசோதனை போதும், தடுப்பூசி வேண்டாம் என வாக்கு எண்ணிக்கை மைய அரசியல் கட்சி முகவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-27 09:00 GMT
காஞ்சிபுரத்தில், அரசியல் கட்சி முகவர்களுக்காக காத்து கிடந்த மருத்துவ ஊழியர்கள்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 க்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் மே இரண்டாம் தேதி காலை 8 மணி முதல் துவங்க உள்ளது

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் வாக்கு மையத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் , வேட்பாளர்களின் முகவர்கள் ,  செய்தியாளர்கள் என பலரும் கொரோனா பரிசோதனை அல்லது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை காண்பித்த பின்னரே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களின் முகவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செவிலிமேடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதில் திமுக முகவர்  இருவர் மட்டுமே கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மீதமுள்ள 130 பேர்களும் தாங்கள் 40 வயதிற்கு குறைவாக உள்ளதாகவும், மேலும் தங்களுக்கு கொரோனா பரிசோதனை போதுமானது எனவும் தடுப்பூசி வேண்டாம் என கூறி  முகாமினை புறக்கணித்தனர்.

ஐந்து நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் நிலையில் இதற்காக வரும் நபர்களை பரிசோதிக்க  இரண்டு மருத்துவர்கள்  , தடுப்பூசி செலுத்த இரண்டு செவிலியர்கள் , பதிவு செய்ய, கிருமி நாசினி வழங்க இரண்டு உதவியாளர்கள் என ஒரு  குழுவே பல மணி காத்திருந்து  இருவருக்கு செலுத்தியது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News