காஞ்சிபுரம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அதிர வைத்த அவந்திகா

Independence Day in Tamil - காஞ்சிபுரம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் மழலை மொழியில் பேசிய குழந்தை அவந்திகாவின் உரை அனைவரையும் கவர்ந்தது.

Update: 2022-08-16 05:18 GMT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தனது மழலை குரலில் பேசிய குழந்தை அவந்திகா.

Independence Day in Tamil - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர அமுதப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்க திடலில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து  காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி , பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்பின் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்நிலையில் விழாவில் மழலை குரலில் சுதந்திரம் நாம் பெற்றது‌ எவ்வாறு எனும் வரலாற்றை கூற தொடங்கியதும் வளாகமே அமைதியை கண்டது.

தொடர்ந்து மூன்று நிமிடங்கள் தனது மழலை மொழியில் பேசி விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது யார் இந்த சிறுமி என கேட்க வைத்த நிகழ்ச்சி அமுதப் பெருவிழாவிற்கு சிகரம் போல் ஆனது.

ராணுவ வீரர்களின் செயல்பாடு , வரலாற்று ஆண்டுகள்‌, ஆங்கிலேயரின் நிலைபாடு என பொரிந்து தள்ளி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலரான லோகநாதன் -  பரமேஸ்வரி தம்பதியரின் 41/2 வயது குழந்தை தான் இவள். குழந்தையின் பெயர் அவந்திகா தனியார் ஆங்கிலப் பள்ளியில் L.K.G வகுப்பு பயின்று வருகிறாள்.

இவர் இதேபோல் ஆங்கில எழுத்துகளை ரிவர்ஸ் வரிசையில் குறைந்த நிமிடங்களில் கூறுவது , 100 திருக்குறளை கூறுவது , விருந்தினர் உபசரிப்பு பாடல்களை பிழையின்றி பாடுதல் என பலவகைகளில் சிறப்புற்று விளங்குகிறார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News