பள்ளி வாசலில் மாணவனை கொலை செய்ய முயற்சியா ? காஞ்சிபுரம் மக்கள் அதிர்ச்சி

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவனை, மர்ம நபர்கள் பட்டா கத்தியால் வெட்ட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-12-22 14:45 GMT

பைல் படம்

பெரிய காஞ்சிபுரம் , சர்வ தீர்த்த குளம் அருகே இயங்கி வருகிறது அரசு நிதி நிலை நாடும் உயர்நிலைப்பள்ளி. அப்பகுதியை சுற்றியுள்ள ஏழை , எளிய மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 4 மணியளவில் அப்பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் தந்தை சாலை விபத்தில் காயம் அடைந்ததாகவும் அதனால் அந்த மாணவனை அழைத்து செல்ல வந்ததாக இருவர் பள்ளி ஆசிரியரும் கூறியுள்ளனர்.

மாணவனின் உறவினர்கள் அல்லாத யாருடனும்  அனுப்ப இயலாது என ஆசிரியர் தெரிவித்ததால் இருவரும் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்புகள் வழியாக மாணவர்கள் வெளியேறிய நிலையில் அந்த மாணவன் வெளியே வந்ததும் முகமூடி அணிந்த சில நபர்கள் அவனைத் தாக்க முயற்சித்த போது மாணவன் சமயோசிதமாக தப்பி பள்ளிக்குள் சென்று தப்பியுள்ளார்.

மாணவனின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடுவதை கண்ட மர்ம நபர்கள் ஒன்றாக அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்து காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதிலளித்தனர்.

பள்ளி மாணவனை மர்ம நபர்கள் பட்டாக்கத்தி விரட்ட வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News