இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் வியப்பை அளிக்கிறது, இல.கணேசன்

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பை அளிக்கிறது, இது ஒரு வகை அச்சத்தையும் ஏற்படுத்துகிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

Update: 2021-07-28 13:45 GMT

 ஓரிக்கை மணிமண்டபத்தில் விஜியேந்திரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.

காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 87வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற விழாவில் வித்வான் வே.மகாதேவன் எழுதிய ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு எனும் புத்தகத்தினை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட பிஜேபியின் மூத்த உறுப்பினர் இல கணேசன்  பெற்றுக்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் வியப்பளிக்கிறது. விரைவாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கையகப் படுத்தும் செயல் ஒருவித அச்சத்தையும் உருவாக்குவதாகும் தெரிவித்தார். இது தனியாருக்கு தாரை வார்க்க இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது

கட்சிக்குள் வந்து ஓராண்டில் நன்மதிப்பைப் பெற்று மாநில அளவில் பதவி பெற்ற அண்ணாமலை செயல் போல் தான் தற்போது அனைத்து பாஜக உறுப்பினர்கள் செயல் உள்ளது எனவும்

இது பழையவர்கள் புதியவர்கள் புதிய பாரதத்தை உருவாக்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 100 ஆண்டு கால காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி ஒரு தலைவர் என்பது பெருத்த வருத்தமே.

அவருடைய அறிக்கைகள் ஒன்று கூட அடுத்தவரை மரியாதையாக நடத்தும் முறையில் இருக்காது எனவே அவர் ஒரு பொருட்டே அல்ல என தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் துவங்குவதில் தாமதம் குறித்த விவாதத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சங்கர மட வரவேற்பு குழு உறுப்பினர் ஜீவா, கூரம் விசுவநாதன்,  ஓம்சக்தி பெருமாள், சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News